Posts

முக்கிய செய்திகள்

Image
 #வெளிநாட்டுவாழ்_இலங்கையர்கள்_தொடர்பில்_மேற்கொள்ளவுள்ள_இறுதித்_தீர்மானம்! வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான காலத்தை ஏழு நாட்களாக குறைப்பது தொடர்பிலேயே இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்குள்ளாகும் போது எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இன்று நடைபெறும் கொவட்-19 பரவலை தடுப்பதற்கான குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான கோரிக்கையினை இராணுவத் தளபதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் முன்வைத்துள்ளார்

அழகானது

Image
 #அழகானது.. ☔ எரிவதில் *தீபம்* அழகானது.......!!! ☔ சுடுவதில் *சூரியன்*அழகானது.......!!! ☔ சுற்றுவதில் *புவி* அழகானது.......!!! ☔ வளர்வதில் *பிறை* அழகானது.......!!! ☔ மின்னுவதில் *விண்மீன்* அழகானது........!!! ☔ தவழ்வதில் *குழந்தை* அழகானது........!!! ☔ குதிப்பதில் *கடல்* நீர் அழகானது......!!! ☔ விழுவதில் *அருவி* அழகானது..........!!! ☔ உறைவதில் *பனி* அழகானது........!!! ☔ விளைவதில் *பயிர்கள்* அழகானது.......!!! ☔ தலை சாய்ப்பதில் *நெற்கதிர்*அழகானது......!!! ☔ குளிர்ச்சியில் *தென்றல்*அழகானது........!!! ☔ உழைப்பதில் *வியர்வை* அழகானது.......!!! ☔ பாடுவதில் *குயில்* அழகானது.........!!! ☔ பறப்பதில் *புறா* அழகானது........!!! ☔ கலையினில் *அறுபத்துநான்கும்* அழகானது......!!! ☔ உறவினில் *நட்பு* அழகானது........!!! ☔ மொழிகளில் *மழலை* மொழி அழகானது.......!!! ☔ மலர்களில் *ரோஜா* அழகானது...... ☔ மலர் வாசனையில் *மல்லிகை* அழகானது.... ☔ கலர்களில் *வெண்மை* அழகானது..... ☔ கலாச்சாரத்தில் *நம் நாடே* அழகானது... ☔ இத்தனைக்கும் இதற்கு மேலேயும்....... ☔ எப்போதும் *தாய்மை* அழகானது........!!! ☔ இதை உணர்ந்த அத்தனை *உள...

News update

Image
  #இலங்கையில்_கொரோனா_வைரஸ்_பரவல்_கட்டுப்பாட்டில் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுகத் சமரவீர தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்றைய (11) தினம் தகவல் தருகையில் தடுப்பூசியின் மூலமும் நோய் கட்டுப்படுத்தப்படுவதாக அவர் கூறினார். நாடளாவிய ரீதியில் முறையான விதத்தில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்றும் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுகத் சமரவீர மேலும் தெரிவித்தார்

அன்பே சிவம்

Image
 இந்து மதத்தின் மிக முக்கிய கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். சிவன், பிரம்மா, விஷ்ணு என்று இந்து மதத்தில் முமூர்த்திகளும், இவர்கள் மட்டுமின்றி பல கோடி கடவுள்கள் இருந்தாலும் அனைவரையும் விட அதிகம் வழிபடபடுபவராகவும், அதிக பக்தர்களை கொண்டவராகவும் சிவபெருமான் இருக்கிறார். முதலும், முடிவு அற்ற சிவபெருமானை வழிபட பல மந்திரங்கள் இருந்தாலும் அவர் அதிகம் விரும்புவது ஒருசில மந்திரங்களைத்தான். சிவபெருமானை வழிபடும் முக்கியமான மந்திரங்களில் ஒன்று " ஓம் நமச்சிவாய " என்பதாகும்.  ஓம் நமச்சிவாய புனித மந்திரம் பெரும்பாலான சிவபக்தர்கள் கூறும் மந்திரம் என்றால் அது ஓம் நமச்சிவாய என்னும் இந்த மந்திரம்தான். இந்த மந்திரம் ஸ்ரீ ருத்ர சமாகம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமானின் ருத்ரம் தீங்கற்றது என்பதை இது உணர்த்துகிறது. வெல்லமுடியாத சக்தியாக சிவபெருமான் இருக்கிறார் என்பதனால் அவரின் பக்தர்கள் இந்த மந்திரத்தை கூறி வழிபடுகின்றனர். ஓம் நமச்சிவாய மந்திரத்தின் பலன்கள் ஓம் நமச்சிவாய மந்திரத்தை கூறுவது சிவனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். இது உடல்ரீதியாக மற்றும் மனரீதியாக இருக்கும் பல பிரச்சி...

News update

Image
#அனைத்துப்_பல்கலைக்_கழகங்களிலும்_கல்வி_செயற்பாடுகளை_ஆரம்பிக்க_நடவடிக்கை! நாட்டின் அடுத்த மூன்று வாரங்களுக்குள் நாட்டிலுள்ள அனைத்து தேசிய பல்கலைக் கழகங்களையும் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். இவ்வாறு திறக்கப்படும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசியை ஏப்ரல் முதல் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரித்துள்ளார்