அன்பே சிவம்
இந்து மதத்தின் மிக முக்கிய கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். சிவன், பிரம்மா, விஷ்ணு என்று இந்து மதத்தில் முமூர்த்திகளும், இவர்கள் மட்டுமின்றி பல கோடி கடவுள்கள் இருந்தாலும் அனைவரையும் விட அதிகம் வழிபடபடுபவராகவும், அதிக பக்தர்களை கொண்டவராகவும் சிவபெருமான் இருக்கிறார்.
முதலும், முடிவு அற்ற சிவபெருமானை வழிபட பல மந்திரங்கள் இருந்தாலும் அவர் அதிகம் விரும்புவது ஒருசில மந்திரங்களைத்தான். சிவபெருமானை வழிபடும் முக்கியமான மந்திரங்களில் ஒன்று " ஓம் நமச்சிவாய " என்பதாகும்.
ஓம் நமச்சிவாய புனித மந்திரம்
பெரும்பாலான சிவபக்தர்கள் கூறும் மந்திரம் என்றால் அது ஓம் நமச்சிவாய என்னும் இந்த மந்திரம்தான். இந்த மந்திரம் ஸ்ரீ ருத்ர சமாகம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமானின் ருத்ரம் தீங்கற்றது என்பதை இது உணர்த்துகிறது. வெல்லமுடியாத சக்தியாக சிவபெருமான் இருக்கிறார் என்பதனால் அவரின் பக்தர்கள் இந்த மந்திரத்தை கூறி வழிபடுகின்றனர்.
ஓம் நமச்சிவாய மந்திரத்தின் பலன்கள்
ஓம் நமச்சிவாய மந்திரத்தை கூறுவது சிவனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். இது உடல்ரீதியாக மற்றும் மனரீதியாக இருக்கும் பல பிரச்சினைகளை குணப்படுத்தும் ஒன்றாக கருதப்படுகிறது.
ஓம் நமச்சிவாய மந்திரம் கூறி வழிபடுவது மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும். இந்த மந்திரம் கூறுவதும் உலகத்திலேயே உயர்ந்த பொருளை கூப்பிடுவதும் ஒன்றுதான். அந்த உயர்ந்த ஒன்று சிவபெருமான்தான்.
ஓம் நமச்சிவாய மந்திரத்தின் உண்மைகள்
இந்த மந்திரம் ஐந்து அக்ஷரங்கள் அல்லது மூலக்கூறுகளை கொண்டுள்ளது. அவை "ந", "ம", "சி", "வா", "ய" என்பதாகும். இது உணர்த்துவது என்னவெனில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களுக்கும் அதிபதியாக இருப்பவர் சிவபெருமான்தான் என்பதாகும்..
பலன்கள்
மனதில் உண்மையான பக்தியோடு இந்த மந்திரத்தை கூறி வழிபடுவது ஒருவரின் ஆன்மாவை சுத்தப்படுத்தும். மேலும் அவர்களை நல்வழிப்பாதையில் செலுத்தி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய உதவும்.
அதிர்வுகள்
இந்த மந்திரத்தின் அதிர்வுகள் நமது மனதையும், ஆழ்மனதையும் விழிப்புடன் இருக்க வைத்து அதனை தெளிவடைய வைக்கும். இந்த மந்திரத்தை தொடர்ந்து கூறுவது மனஅழுத்தம், தூக்கபிரச்சினைகள் மற்றும் மனநோய்களை குணப்படுத்தும். மனஅழுத்தத்திற்கு இந்த மந்திரத்தை விட சிறந்த தீர்வு எதுவுமில்லை.
ஓம்
" அம் " என்பது நமது பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து கூறுவது நமக்குள் இருக்கும் நேர்மறை ஆற்றலை எழுப்பும், நமது எண்ணங்கள் மற்றும் செயல்களை சீராக்கும்..!
அமைதி
இந்த மந்திரத்தை தொடர்ந்து 108 முறை கூறுவது கோபம் மற்றும் மூர்கத்தனத்தை கட்டுப்படுத்தும். இது வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்துவதுடன், வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பையும் உண்டாக்கும்.
ஓம் நமச்சிவாய.
Comments
Post a Comment